ஆளுமை:கணேசலிங்கம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசலிங்கம்
தந்தை கந்தையா
தாய் பொன்னம்மா
பிறப்பு 1953.10.24
இறப்பு -
ஊர் உருத்திரபுரம்
வகை அரசசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Kandaiah ganesalinkam.jpg

கணேசலிங்கம், கந்தையா (1953.10.24 - ) உருத்திரபுரம் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட அரச சேவையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை பற்றிமா பாடசாலையிலும் தரம் 7 வரை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யா. கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியிலும் பயின்றார்.

1982 இல் விவசாய விரிவாக்க சேவையாளராகவும் ,1992 ல் கிராம சேவை உத்தியோகத்தராகவும், 1994 இல் விவசாயப் போதனாசிரியராகவும் பின்னர் பயிர்ப்பாதுகாப்பு உத்தியோகத்தராகவும், பண்ணை உத்தியோகத்தராகவும், 5 வருடங்கள் வவுனியாவில் வேளாண்பண்ணை அதிபராகவும் கடமை புரிந்துள்ளார். விவசாயம் சார்ந்து பல கவிதை ஆக்கங்களை கமத்தொழில் விளக்கம் எனும் விவசாய வெளியீட்டில் எழுதியுள்ளார். கலா கணேசன் என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். நினைவுக்கல்கல்வெட்டுக்களையும் எழுதி வருகிறார்.