ஆளுமை:ஊடறு றஞ்சி
பெயர் | றஞ்சினி |
தந்தை | சிவனடியான் |
தாய் | புவனேஸ்வரி |
பிறப்பு | |
இறப்பு | - |
ஊர் | கரம்பன் |
வகை | பன்முக ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றஞ்சினி, பத்மநாதன் (1964.11.22) மலையகம், பல்மோறல் எஸ்டேட்டில் பிறந்தவர். இவரது தந்தை சிவனடியான்; தாய் புவனேஸ்வரி. லண்டன் மற்றும் சுவிற்சலார்நதுக்கு புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார். விமர்சனம், புத்தக அறிமுகம், கட்டுரைகள், நேர்காணல்கள் நிகழ்வுக் குறிப்புகள் என றஞ்சி (சுவிஸ்)என்ற பெயரில் எழுதி வருபவர்.ஊடறுவை தோற்றுவித்ததினால் ஊடறு றஞ்சி என்றும் அழைக்கபடுகின்றார்.
1991 இலிருந்து 1994 வரை சுவிஸ் மனிதம் அமைப்பினருடன் இணைந்து செயற்பட்டவர்
-சுவிஸ்பெண்கள் அமைப்புகளில் இணைந்து செயற்பட்டதுமல்லாமல் 1993 இலிருந்து 2010 வரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய தமிழ் பெண்கள் சந்திப்பை நடாத்துவதற்காக தனது பங்களிப்பை செலுத்தியவர் சுவிற்சர்லாந்தில் 1995,1997,2003 ம் ஆண்டுகளில் பெண்கள் சந்திப்புக்களை ஒருங்கிணைத்து நடாத்தியவர் ஜேர்மன், இலண்டன் ,பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பெண்கள் சந்திப்புகளிலும் ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து தனது பங்களிப்புக்களை செலுத்தியுள்ளார். இவ் பெண்கள் சந்திப்புக்கள் பற்றிய குறிப்புக்களை சக்தி சஞ்சிகையிலும் மற்றும் ஊடறு,பதிவுகள்,திண்ணை, கீற்று போன்ற இணையத்தளங்களில றஞ்சி சுவிஸ் என்ற பெயரில் எழுதி பதிவும் செய்துள்ளார். அதே போல் 1995- 2004 ,2005 ஆண்டின் பெண்கள் சந்திப்பு மலரை தொகுத்தவர்.
-1997 ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை சக்தி சஞ்சிகையின் (நோர்வே) இணை ஆசிரியராக இருந்தவர். புலம்பெயர் பெண்களின் சிறுகதைத்தொகுப்பான புதுஉலகம் எமை நோக்கி என்ற தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவர்.
முதன் முதலில் உலகளாவிய தமிழ்பெண்களின் படைப்புக்களை தொகுத்து 2002 ஆண்டு ஊடறு தொகுப்பை வெளியிட்டவர் .
2005 ஆம் ஆண்டு உலகளாவிய தமிழ் பெண்களுக்கான முதலாவது இணையத்தளமான ஊடறுவை நிறுவியவர் www,udaruold.blogdrive.com - www.oodaru.com இன்று வரை அந்த இயங்கிக்கொண்டிருப்பவர்..
-றஞ்சியின் ( றஞ்சி -சுவிஸ்) எழுத்துக்கள் - இலங்கை - சரிநிகர் , வீரகேசரி, பெண்இ தினகரன், தினக்குரல், -பெண்கள் சந்திப்பு மலர் (ஜேர்மன்) -சக்தி (நோர்வே ) -மனிதம் (சுவிஸ் ) -உயிர்நிழல், எக்சில், அம்மா , தோற்றுத்தான் போவோமா -( பிரான்ஸ் ) -இன்னொரு காலடி ,கண்ணில் தெரியுது வானம்,வெளி பத்திரிகை, குளோபல் தமிழ் நியூஸ் (லண்டன்) -உன்னதம் (இந்தியா) -புலம்பெயர் வானொலிகளான -லண்டன் மெய்வெளி, ஐபிசி,ரிபிசி, ரிஆர் ரி ,பிரான்ஸ் வானொலிகளிலும் -இணையத்தளங்களான பதிவுகள் ,திண்ணை, வார்ப்பு, ஆறாம்திணை ,தோழிகள், கீற்று, ஊடறு ஆகிய வற்றிலும் றஞ்சி (சுவிஸ்) என்ற பெயரில் தனது எழுத்துக்களை பதிவு செய்துள்ளார்
புகலிட இலக்கிய சந்திப்புகளிலும் பேச்சாளாராக கலந்து கொண்டுள்ளார் (ஜேர்மன் ,சுவிஸ் ,லண்டன், நோர்வே) - சுவிற்சலாந்தில் உள்ள பல்லின நாட்டின் பெண்கள் அமைப்பான பெமில் குளோபல் FEMME GLOBAL- என்ற அமைப்பின் அங்கத்துவர் மற்றும் செயற்பாட்டாளர்
-கடந்த 7 வருடங்களாக சுவிஸ் இரண்டாம் தலைமுறையினருடன் இணைந்து தொடர்ந்து நடைபெற்று வரும் சுவிஸ் வாசிப்பும் உரையாடலும் என்ற அமைப்பின் வேலைதிட்டங்களில் பங்கெடுத்து அவ் உரையாடலை ஒழுங்கமைக்கும் பொறுப்புகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் -விருது சுவிற்சலாந்தில் உள்ள அமைப்பான des Tamilischen Elternvereins Burgdorf ஊடறு றஞ்சியின் சேவையை பாராட்டி 2016 ம் ஆண்டு விருது கொடுத்து கௌரவித்தது
இவர் ஊடறு நூல்களின் தொகுப்பாளர்.
இத்தொகுப்புக்களாக ஊடறு தொகுப்பு 2002 (உலகளாவிய தமிழ்பெண்களின் படைப்புக்கள்),என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு 2006 (பெண்ணியாவின் கவிதைகளின் தொகுப்பு), மை 2007( ஊடறு இணையத்தளத்தில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு), இசைபிழியப்பட்ட வீணை 2007(இலங்கை மலையகப் பெண்களின் கவிதைகள் தொகுப்பு), பெயரிடாத நட்சத்திரங்கள் 2011 இரண்டாம் பதிப்பு 2017 (ஈழப்பெண்போராளிகளின் கவிதைப் தொகுப்பு), சங்கமி பெண்ணிய உரையாடல்களின் தொகுப்பு போன்றன கானப்படுகின்றன.
இதுவரை ஊடறு பெண்கள் சந்திப்பின் சென்னை இந்தியா (2014) மலையகம் இலங்கை 2015 பினாங்கு மலேசியா 2016 மும்பை இந்தியா 2017 மட்டக்களப்பு இலங்கை 2018 சிங்கப்பூர் 2019 ஒழுங்கமைப்பாளர் ஊடறுவில் 3600 பெண்களின் மேற்பட்ட படைப்புக்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பெண்கவிஞர்களின் கவிதைகள் 67 பேரின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுமல்லாது அவர்களின் கவிதைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன சிறுகதைகள் ,கட்டுரைகள், நேர்காணல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ,பதிவுகள் ,அறிவிப்புகள், வேண்டுகோள்கள், குறும்படங்கள், நூலகம், காணொளிகள், பெண் ஆளுமைகள் என அனைத்தையும் இணைத்து செயற்படுத்தி வருகின்றார்.