ஆளுமை:உமாஷானிக்கா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உமாஷானிக்கா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலங்கையில் பிறந்து தற்போது பெர்லின் நகரில் வசித்து வரும் இவர், கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புகலிடத் தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் "இலக்கியச் சந்திப்பு","பெண்கள் சந்திப்பு " ஆகியவற்றில் ஆரம்பந்தொட்டு செயற்பட்டு வருவதுடன் பெண்ணுரிமை,மனிதவுரிமை, சமூக அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும் கருத்தாடல்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருபவர். புகலிடத்தில் வெளியான சிறுசஞ்சிகைகளான "தேனீ " "ஊதா " ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் இயங்கியவர். புகலிடப் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கி வெளியான முதலாவது கவிதைத் தொகுப்பான "மறையாத மறு பாதி"யில் பிரியதர்சினி என்ற புனைபெயரில் இவரது கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றதோடு, புகலிடத்தில் வெளியான பெண்கள் சந்திப்பு மலர் உட்பட வேறு சில தொகுப்புகளிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியிருக்கின்றன.


குறிப்பு : மேற்படி பதிவு இணைய தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:உமாஷானிக்கா&oldid=551252" இருந்து மீள்விக்கப்பட்டது