ஆளுமை:இறைபிள்ளை, வேலுப்பிள்ளை
பெயர் | இறைபிள்ளை |
தந்தை | வேலுப்பிள்ளை |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | 1940.01.20 |
இறப்பு | - |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | பன்முகஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இறைபிள்ளை, வேலுப்பிள்ளை (1940.01.20-) வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச எழுதுவினைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும், உயர்கல்வியை வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியிலும் பயின்றார். கிளிநொச்சி கனகபுரம் எனும் ஊரில் குடியேறி வசிப்பிடமாகவும் கொண்டவர்.
கொழும்பு கொலன்னாவை அரச தொழிற்சாலையிலும், கண்டி அரசாங்க வேலைப்பகுதியிலும்,மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் எழுதுவினைஞராகவும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமை புரிந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் மொழிப்பயன்பாட்டினை மேம்படுத்துவதற்காக உழைப்பவர். நாட்டுக்கூத்துப்போன்றவற்றை மக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வந்தார். கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்க வாழ்நாள் தலைவராக விளங்குகின்றார்.
இவர் பெற்ற விருதுகளாக கரைஎழில் கரைச்சிப்பிரதேச சபையினாலும்,கிளிஎழில்கிளிநொச்சிமாவட்டச்செயலகத்தினாலும்முதலமைச்சர் விருது வட மாகாணசபையினாலும் மன்னார் தமிழ்ச்சங்க விருதினையும் குறிப்பிடலாம்.