ஆளுமை:இராசையா, வல்லியப்பர்
பெயர் | இராசையா |
தந்தை | வல்லியப்பர் |
தாய் | ஆச்சிமுத்து |
பிறப்பு | 1919.11.22 |
இறப்பு | 2007.02.17 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசையா, வல்லியப்பர் (1919.11.22 - 2007.02.17) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லியப்பர்; தாய் ஆச்சிமுத்து. வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றிய இவர் பின்னர் ஆசிரியப் பணிக்குத் திரும்பி, கொழும்பு ஆசிர்வாதப்பர் கல்லூரியில் பணியாற்றினார். இலங்கை வானொலியில் ஒலிபரப்புத்துறையிலும் இருபது வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார்.
இவராலும், சில நலன் விரும்பிகளாலும் 1974 ஆம் ஆண்டு "தமிழ் கதைஞர் வட்டம்" உருவாக்கப்பட்டது. பின்னர் எவ்வமைப்புத் "தகவம்" இலக்கிய அமைப்பாக இயங்கியது. இங்கு பல புத்தகங்கள் அச்சிற் பதிக்கப்பட்டதோடு சிறந்த இலக்கியப் படைப்புக்களிற்குக் கெளரவங்களும் அளிக்கப்பட்டன.
இவர் சண்டியன் ஓநாய், சந்தனக்கிண்ணம், புதிய பூக்கள் முதலான சிறுவர் இலக்கியங்களையும், குறள்வழி வாழ்வு என்ற கட்டுரைத்தொகுப்பையும், தகவம் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 208-210
- நூலக எண்: 4149 பக்கங்கள் 01-130
- நூலக எண்: 15514 பக்கங்கள் 70-76
- நூலக எண்: 399 பக்கங்கள் 05-08
- நூலக எண்: 1026 பக்கங்கள் 14-15