ஆளுமை:இராசையா, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசையா
தந்தை குமாரவேலு
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1928.05.15
ஊர் முரசுமோட்டை, கிளிநொச்சி
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசையா, குமாரவேலு (1928.05.15 - ) கிளிநொச்சி, முரசுமோட்டையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை குமாரவேலு; தாய் சின்னப்பிள்ளை. கண்டாவளைக் கவிராயர் எனப் பலராலும் அறியப்பட்டார். இவர் கண்டாவளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கரவெட்டி திரு இருதயக் கல்லூரி, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்றார். இவர் பாலபண்டிதக் கல்வியையும் பெற்றுள்ளார். 1956 இல் ஊரியான் கிராம அதிகாரியாக நியமனம் பெற்று 1963 வரை கிராம அதிகாரியாகவும், பின்னர் கிராம சேவை நிலதாரியாக 1986 ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார்.

இவரது முதல் ஆக்கம் 1953 ஆம் ஆண்டு ஐக்கியத் தீபம் என்னும் பத்திரிகையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். இவை தினக்குரல், ஈழகேசரி, வீரகேசரி, சைவநீதி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளது. இவர் இலங்கை இந்தியத் தல யாத்திரையின் போது 30 தலங்களைத் தரிசித்துப் பாடித் துதித்தார். அதனைக் கோபுர வாயில் என்னும் தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டார்.

இவரது ஆளுமைகளைக் கெளரவித்து 1986 இல் 'கவிமணி' தேசிய விருதும், 2000 இல் கோபுரவாயில் என்னும் நூலுக்கு பணப்பரிசும், சன்றிதழும், அதே ஆண்டில் கந்தகோட்டை மான்மியம் என்னும் காவியத்திற்கு அகில இலங்கை சாகித்திய விருதும், 2002 இல் கலாபூஷணம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 136-141