ஆளுமை:இராசு, தம்பையா
நூலகம் இல் இருந்து
பெயர் | இராசு |
பிறப்பு | |
ஊர் | நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசு, தம்பையா யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தினால் வளர்க்கப்பட்டு ஈழத்தில் வில்லிசை பாடுபவர்களில் குறிப்பிடத்தக்கவராக மிளிர்ந்தார். புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்கின்றார்.
ஜேர்மனியில் பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராக இருந்ததோடு இம்மன்றத்தின் சார்பில் பல நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றி இருக்கின்றார். பல நாடுகளில் வில்லிசை நிகழ்ச்சிகளையும் நடாத்தியிருக்கின்றார். இவர் 'எதிர்ப்பார்ப்புகள்' என்னும் நாடகத் தொகுதியை வெளியிட்டதுடன் இத்தொகுதியில் தான் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் ஒன்பது நாடகங்களை உள்ளடக்கியுள்ளார் .இவர் 'நினைவுமுகம்', 'தயவுடன் வழிவிடுங்கள்' ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களைத் தயாரித்து நடித்து நெறிப்படுத்தியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 608-609