ஆளுமை:இராசரத்தினம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1934.08.29
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சுப்பிரமணியம் (1934.08.29 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை செங்குந்தா இந்துக் கல்லூரியிலும், பரமேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

1972 ஆம் ஆண்டிலிருந்து கலாகேசரி கலாலயத்தில் சிற்பக்கலைத் தொழிலை மேற்கொண்டு வந்தார். 1984 ஆம் ஆண்டு விநாயகர் சிற்பாலயம் என்னும் தொழிற்கூடமொன்றைத் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடியில் நிறுவி மஞ்சங்கள், சப்பை ரதங்கள், கைலாய வாகனங்கள், உற்சவ மூர்த்திகளைக் காவும் வாகனங்கள், சித்திரத்தேர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பக்கலை வடிவங்களை உருவாக்கிச் சிறப்புற்று விளங்கினார்.

இவர் சிற்ப ஜோதி, தெய்வீக சிற்பவாரி, இந்திர ஐராவத சிற்ப பிரம்ம மாணிக்கம், சிற்பகலாபூபதி, சிற்பக் கலாவித்தகர், கலைஞானகேசரி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 202
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 235