ஆளுமை:இரத்தினசிங்கம், தம்பாபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினசிங்கம்
தந்தை தம்பாபிள்ளை
தாய் எலிசெபெத்
பிறப்பு 1932.02.05
இறப்பு 1995
ஊர் நாவாந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினசிங்கம், தம்பாபிள்ளை (1932.02.05 - 1995) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை தம்பாபிள்ளை; தாய் எலிசெபெத். இவர் தனது ஆரம்பக்கல்வியை நாவாந்துறை றோமன் கத்தோலிக்கத் தமிழ் வித்தியாலயத்தில் பயின்றார். மலைக்கோட்டை கோவிந்தசாமிப்பிள்ளை அவர்களது உதவியுடன் இந்தியாவுக்குச் சென்று வாய்ப்பாட்டு இசையையும், மிருதங்க இசையையும் கற்றார்.

இவரது மிருதங்க அரங்கேற்றம் 1951 ஆம் ஆண்டு இசைப்புலவர் சண்முகரத்தினம் அவர்களுடைய வாய்ப்பாட்டு இசையரங்கில் நடை பெற்றது. இவருடைய மிருதங்க வாத்திய வித்துவத்திறமையால் இலங்கை வானொலியில் 1952 ஆம் ஆண்டு நிலையவித்துவான் நியமனம் கிடைத்தது. இவர் மேடை நிகழ்ச்சிகளுடன் இலங்கை வானொலி, ரூபவாஹினி ஆகிய நிலையங்களில் சிறப்புக் கலைஞராகத் தனி நிகழ்ச்சிகள் வழங்கியும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்தும் பாராட்டுப் பெற்றார்.

இவரது திறமைக்காக இலங்கை அரசினால் கலாசூரி என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 77-81