ஆளுமை:இரத்தினசபாபதி, சிவப்பிரகாசம்
நூலகம் இல் இருந்து
பெயர் | இரத்தினசபாபதி |
தந்தை | சிவப்பிரகாசம் |
தாய் | சிவகாமிப்பிள்ளை |
பிறப்பு | 01.07.1926 |
இறப்பு | 07.08.2013 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | ஆசிரியர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இரத்தினசபாபதி, சிவப்பிரகாசம் (1926.07.01 - 2013.08.07) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சிவப்பிரகாசம்; தாய் சிவகாமிப்பிள்ளை. பண்ணிசையிலும், சோதிடக்கலையிலும் ஈடுபாடு கொண்டார். புங்குடுதீவு ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஓதுவாராகத் தொழிற்படும் இவர் மாணவர்களுக்குப் பஞ்ச புராணம் ஓதும் முறையைக் கற்றுக் கொடுத்தார்.
இராணுவம் புங்குடுதீவை ஆக்கிரமித்த போது புங்குடுதீவில் இருந்து பிரிக்கப்பட்ட இவர் அங்கு தங்கிய முதியவர்களுக்கு மு.பொன்னம்பலம் குழுவினருடன் சேர்ந்து உதவி செய்தார். கிராம மக்களுக்கு இவர் செய்த பணிகளுக்காக 2006 ஆம் ஆண்டு வேலணை பிரதேச சபை கலை விழாவில் இவர் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 197