ஆளுமை:இரகுநாதையர், சிவராமலிங்கையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரகுநாதையர்
தந்தை சிவராமலிங்கையர்
பிறப்பு 1901.03.03.
இறப்பு 1969.30.07.
ஊர் கொக்குவில்
வகை சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரகுநாதையர், சிவராமலிங்கையர் (1901.03.03 - 1969.30.07.) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த சோதிடர், பதிப்பாளர். இவரது தந்தை சிவராமலிங்கையர். யாழ்ப்பாணம் நாவலர் வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். அத்தோடு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை நன்கு கற்று மெற்றிகுலேசன் பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பின் யாழ்.திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தொடர்ந்தும் மேற்படிப்பினைப் படித்து லண்டன் இன்ரர் சயன்ஸ் பரீட்சையில் திறமையுடன் தேர்ச்சி பெற்றார். மேலும் பல மொழிகளையும் கற்று அம்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார்.

1924 ஆம் ஆண்டு முதல் தனது தந்தைக்கு உதவியாக வாக்கிய பஞ்சாங்கத்தில் பல புதுமாற்றங்களை ஏற்படுத்தி வாக்கிய பஞ்சாங்கம் சிறந்தது என்ற கருத்தை மக்கள் மனதில் வியாபிக்கச் செய்ததோடு தனது தந்தையாரால் நிறுவப்பட்ட சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலை மூலமாகப் பஞ்சாங்கத்தை அச்சிட்டு வெளியிட்டதோடு, வேறு பல நூல்களையும் வெளியிட்டார். சோதிட பரிபாலினி என்னும் வார சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டு சோதிடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து வந்தார்.

பரகிதம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டார். சரசோதி மாலை முழுவதும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். வருஷப் பெயர் விளக்கம், ஆசௌச தீபிகை, அமாவாசை தருப்பண விதி, நித்திய கரும விதி, சிவாலய தரிசன விதி, பிள்ளையார் கதை, நவக்கிரக மஹா மந்திரம் போன்ற நூல்களுடன் இன்னும் பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 10
  • நூலக எண்: 963 பக்கங்கள் 37