ஆளுமை:ஆனந்தராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்தராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1949.08.10
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராசா, கந்தையா (1949.08.10) யாழ்ப்பாணம் ஸ்ரீரங்கம் ஊரெழு கிழக்கினை வதிவிடமாகக் கொண்டவர்.. இவரது தந்தை கந்தையா; அன்னைதாசன் என்ற புனைபெயரில் அறியப்பட்ட இசைச் சொற்பொழிவாளர். ஓய்வுபெற்ற அதிபராவார்.

1960ஆம் ஆண்டு வசாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தில் புராண படலம் ஓதல் மூலம் இசைச் சொற்பொழிவை ஆரம்பித்தார். 1980ஆம் ஆண்டு சாயிசமித்தி நிறுவனத்தின் தலைவராக இணைந்து இசைச் சொற்பொழிவை நடத்தியுள்ளார். 1990ஆம் ஆண்டு அன்னை சாரதாவின் வரலாற்றினை இசையால் வெளிப்படுத்தியதன் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றார். இவர் நாட்டின் பல பாகங்களிலும் இசை சொற்பொழிவுகளை வெளிப்படுத்தியுள்ளார். பாடலாக்கத் திறனும் மிகுந்த ஒரு கலைஞர் ஆவார்.

1983ஆம் ஆண்டு உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலய பவள விழாவில் பக்த மார்க்கண்டேய நாடகத்தினை நெறியாள்கை செய்து அதில் நடித்தும் உள்ளார். 1983ஆம் ஆண்டு களவாவோடை அம்மனின் சிறப்புக்களைப் பாடலாக்கி வெளிப்படுத்தியுள்ளார். ஞானச்சுடர் எனும் சஞ்சிகையில் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

விருதுகள்

சக்தி உபாசகர் – உரும்பிராய் காளி அம்மன் நிர்வாகத்தினரால் – 2009.

கவிமணி பட்டம் – 2009.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 3-4
  • நூலக எண்: 4963 பக்கங்கள் 33-40
  • நூலக எண்: 8302 பக்கங்கள் {{{2}}}
  • நூலக எண்: 13852 பக்கங்கள் 56-57