ஆளுமை:அருள்குமரன், தவராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள்குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு 1984.03.29
ஊர் தெல்லிப்பளை
வகை நாடகத்துறைக் கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள்குமரன், தவராசா (1984.03.29 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த நாடகத்துறைக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் ஆரம்பக்கல்வியை தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை யா/ யூனியன் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலில் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தையும் பண்பாட்டியல் கற்கைநெறியில் முதுகலைமாணிப்பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்கல்வி டிப்ளேமாவினையும் பெற்றுக் கொண்டுள்ளார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்துறை ஆசிரியராகவும் கொக்குவில் இந்துக்கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் நவீன நாடகத்துறை இணைப்பாளராகவும், சுன்னாகம் பொது நூலகத்தின் கலை கலாசாரக்குழுவின் உப செயலாளராகவும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தெல்லிப்பளை தமிழ் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் புத்தாக்க அரங்க இயங்கம் என்னும் அரங்க நிறுவனத்தை தனது சகோதரரனான எஸ்.ரி.குமரனுடன் இணைந்து உருவாக்கிப் பல்வேறு தெருவெளி நாடக செயற்பாடுகள், மாணவர்களுக்கான களப்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றார். பல்கலைக்கழகக் காலத்தில் 'நுண்கலைத்துறையின் வரலாறு' என்னும் ஆவணப்படத்தை எடுத்துள்ளார். நாடகம், ஊடகம், இலக்கியம், விவாதம், வில்லிசை, குறும்படம் என பலதுறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்ற இவர், பல நாடகங்களை மேடையேற்றி பலரது பாராட்டையும் கொண்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான நாடக விழாவில் எஸ்.ரி.குமரனுடன் இணைந்து நெறியாள்கை செய்த 'கண்டல்' நாடகம் தேசிய ரீதியில் விருதைப் பெற்றுக் கொண்டது. றோயல் கல்லூரியினால் நடத்தப்பட்ட நாடகப்பிரதியாக்கப் போட்டியில் 2013 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் 2016 ஆம் ஆண்டு இவரது நெறியாள்கையில் நிகழ்த்தப்பட்ட 'ஒரு நதி அழுகிறது' என்னும் நாடகத்திற்கு சிறந்த தயாரிப்பிற்கான விருது, ஒளிவிதானிப்பிற்கான விருதினையும் பெற்றுக்கொண்டார். வலிகாமம் கல்வி வலயத்தினால் 2015 இல் சிறந்த ஆசிரியராக கௌரவிக்கப்பட்டார். க.பொ.த. சாதாரண மாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறுவினாவிடைகள் (250), க.பொ.த. உயர்தர பிரிவு மாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறு வினாவிடைகள் (500) தொகுப்பாசிரியராகவும், இசை நாடக கூத்துப்பாடல்கள், பண்பாடு (தெருவெளி ஆற்றுகை பிரதிகளின் தொகுப்பு) ஆகியவற்றின் இணை ஆசிரியராகவும் விளங்கினார்.


இவற்றையும் பார்க்கவும்