ஆளுமை:அருளானந்தம், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளானந்தம்
தந்தை சண்முகம்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளானந்தம், சண்முகம். திருகோணமலை, ஆலங்கேணியைச் சேர்ந்த எழுத்தாளர். பட்டதாரியான இவர் ஆசிரியர், அதிபர், பிரதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவரது படைப்புக்களான சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து ஆகியன சுதந்திரன், சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, தினமுரசு, தினக்கதிர், ஈழமணி, வெற்றிமணி, குமரன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் இதுவரை 25 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு கலாபூஷணம் பட்டத்தையும், வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் சிறுவர் இலக்கிய வித்தகர் பட்டத்தையும் இவருக்கு வழங்கியுள்ளது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1778 பக்கங்கள் 17
  • நூலக எண்: 1035 பக்கங்கள் 6-8