ஆளுமை:அமலராஜா, டானியல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமலராஜா
தந்தை டானியல்
பிறப்பு 1963.09.20
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமலராஜா, டானியல் (1963.09.20) யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை டானியல்; 1987ஆம் ஆண்டு முதல் மேலைத்தேய கிட்டார் வாத்தியத்தை முறையாகக் கற்று 1991ஆம் ஆண்டு முதல் இசைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

பாடசாலை மேடை நிகழ்வுகள், ஆலய விழாக்கள் என்பவற்றுக்கு கிட்டார் இசை வழங்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இசை வழங்கியுள்ளார். மானிப்பாய் நடேஸ்வராலய கவின் கலைக் கல்லூரியில் கிற்றார் வாத்திய பாட ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். சிறந்த கிட்டார் கலைஞருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். சுவி்ஸ்சர்லாந்து, ஜேர்மன், கொலண்ட், டென்மார்க் போன்ற நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார் அத்துடன் இந்தியக் கலைஞர்களுடன் இணைந்தும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தற்போது யாழ்ப்பாண கிட்டார் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இச்சங்கத்தில் இசை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியை வழங்கி வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 1-2
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமலராஜா,_டானியல்&oldid=394429" இருந்து மீள்விக்கப்பட்டது