ஆளுமை:அப்புத்துரை, சிறீரங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்புத்துரை
தந்தை சீறீரங்கம்
பிறப்பு 1928.04.22
ஊர் இளவாலை
வகை எழுத்தாளர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புத்துரை, சிறீரங்கம் (1928.04.22 - ) யாழ்ப்பாணம், மயிலங்கூடல், இளவாலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், அதிபர். இவரது தந்தை சிறீரங்கம்.

1950களில் எழுதத்தொடங்கிய இவர், கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜ விநாயகர் இரட்டை மணிமாலை (1998), கல்முனை சந்தாங்கேணிச் சதுக்கம் அருள்மிகு சந்தான ஈஸ்வரர் திருவூஞ்சல் (2001), கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் சதகம், யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் நான்மணிமாலை (2002), இளவாலை நதோலை அருள்மிகு முத்துமாரியம்பாள் திருவூஞ்சல் (2004) போன்ற பல பாடல் நூல்களையும் நற்சிந்தனை நாற்பது, தமிழர் திருமணம், அமுதமொழி, மகத்துவ விரதங்கள், சைவ சமய அபரக்கிரியை விளக்கம் போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட உரைநடை நூல்களையும், மழலைச் செல்வம், மழலை முத்துக்கள், மழலைப் பாமலர்கள், மழலையர் பா அமுதம் போன்ற பல சிறுவர் பாடல் தொகுப்புக்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கலாபூஷணம் விருது பெற்றவர். அமுதமொழி நூலிற்காக வடக்கு - கிழக்கு சாகித்திய மண்டல விருதும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 01
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 50-51


இவற்றையும் பார்க்கவும்