ஆளுமை:அப்துல் காதர், முகம்மது சுல்தான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மர்ஹூம் முகம்மது சுல்தான் அப்துல் காதர்
தந்தை முகம்மது சுல்தான்
தாய் உம்முகுல்தூன்
பிறப்பு 1934.06.16
இறப்பு 1999.07.06
ஊர் திருகோணமலை
வகை உள்ளூராட்சி இலிகிதர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் காதர் அவர்கள் 1934.06.16 இல் யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் மர்ஹூம் முகம்மது சுல்தான், உம்முகுல்தூன் தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் ஆங்கில மொழிமூலம் கற்று சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில் (SSC) சித்தியடைந்தார்.

தனது 20வது வயதில் உள்ளூராட்சி இகிலிதர்சேவையில் நுழைந்த இவர் 1954 இல் கிண்ணியா கிராம சபையில் இலிகிதராக நியமனம் பெற்றார். அதனைத் தோடர்ந்து மூதூர், குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை, ஆலங்கேணி போன்ற கிராம சபைகளிலும், கிண்ணியா பிரதேச சபையிலும் கடமையாற்றியுள்ளார்.

இவரது மொத்த சேவைக்காலமும் திருகோணமலை மாவட்டத்திலேயே கழிந்துள்ளது. இதனால் தனது நிரந்தர வாழிடத்தை கிண்ணியாவுக்கு மாற்றிக் கொண்டார். 35 வருட அரச சேவையில் இருந்து 1989 இல் 55 வது வயதில் இவர் ஓய்வு பெற்றார்.

எல்லோரும் இவரைக் காதர் கிளாக்கர் என்று செல்லமாக அழைப்பர். இவர் பணிபுரிந்த அலுவலகங்களில் ஆவணங்களைப் பேணுவதில் மிகவும் கண்ணுங் கருத்துமாகச் செயற்பட்டு வந்துள்ளார். அதிகம் பேச மாட்டார். சுருக்கமாக நகைச்சுவை ததும்ப பேசும் இயல்புடையவர். எப்போதும் வெள்ளை நிற உடையுடன் இருக்கும் இவர் மார்க்கப் பற்றுள்ளவர். மென்மையான போக்குள்ளவர். உள்ளூராட்சி இலிகிதர் சேவையில் நீண்ட காலம் சேவையாற்றி பல்வேறு பணிகள் புரிந்தவர்

தாஹிரா உம்மா இவரது வாழ்க்கைத்துணைவி ஆவர். ஜரீனா, முஸம்மில், முனாஸ், முபீன் (ஆசிரியர்) ஆகியோர் இவரது பிள்ளைகள்.

இவர் தனது 65 வது வயதில் 1999.07.06 இல் இவர் காலமானார்.