ஆளுமை:அனஸ், எம். எம். ஏ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது முகைதீன் அப்துல் அனஸ்
தந்தை முகம்மது முகைதீன்
தாய் சபியா
பிறப்பு 1964.09.01
இறப்பு -
ஊர் மூதூர், திருகோணமலை
வகை அரசியல் ஆய்வாளர்
புனை பெயர் காப்பிய கதிரோன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முகம்மது முகைதீன் அப்துல் அனஸ் அவர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1964.09.01 அன்று முகம்மது முகைதீன் மற்றும் சபியா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

காப்பிய கதிரோன் முகம்மது முகைதீன் அப்துல் அனஸ் அவர்கள் இலங்கை துறைமுக அதிகார சபையில் திருகோணமலைக்கான தொழில் உறவு அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர். முனாரில் புலவர் பரம்பரையில் புலவர் சாலயர் (முகையத்தின்), புலவர் உமர் நெய்னார், கவிஞர் கலாபூஷணம் எம். ஏ. பரீது எனத் தொடரும் குடும்ப பரம்பரை வழியில் தோன்றிய கவிஞர் அனஸ் ஆவார்.

இயற்கையாகவே கவிபாடும் ஆற்றல் கொண்டவர் கவிஞர் அனஸ் அவர்கள். கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் இவரின் நாயகக் காவியம் மற்றும் மூதூர் முன்னேற்றக் காவியம் ஆகிய நூல்களுக்கு சிறந்த நூல்களுக்கான மாகாண அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருடைய காவியத் திறனை கருத்தில் கொண்டு திருகோணமலை தமிழ்ச்சங்கம் 'காப்பிய கதிரோன்' என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கியது.

முகைதீன் அப்துல் அனஸ் அவர்கள் 35 நூல்களை இன்றுவரை வெளியிட்டுள்ளார். காவியம், வெண்பா, நன்நெறிக்குறள், எண்சீர் விருத்தங்கள், அகவல், புதுக்கவிதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பணி செய்து வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு செயலாளராக, அரசியல் உயர்பீட உறுப்பினராக, திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக இருந்த முகைதீன் அப்துல் அனஸ் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் மர்ஹீம் எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களின் வழிகாட்டலில் உருவாகிய ஒரு மக்கள் சேவகனுமாவார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அனஸ்,_எம்._எம்._ஏ.&oldid=601677" இருந்து மீள்விக்கப்பட்டது