ஆளுமை:நல்லதம்பி, வீ. வ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லதம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி, வீ. வ. அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். 1954 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட கிராமாட்சி மன்ற சமாசத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு கிராம அபிவிருத்தி பணிகளை திறம்படச் செய்ததோடு 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபராகவும் கடமையாற்றினார்.

தன்னலமற்ற சேவையாளனான இவர் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்கின்ற வேளையிலும் தமிழினது சமயத்தினதும் முன்னேற்றத்துக்காக பணியாற்றினார். கனடா நாட்டில் சைவநீதி எனும் மலரை வெளியிடு செய்தார்.

1977ஆம் ஆண்டு ஸ்காபரோ கலாசார விருது விழாவில் இலக்கியத்திற்கான விருதினைப் பெற்று கொண்டார். இதுவே கனடா நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் பெற்ற முதல் விருதாகும். 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மொரிசியசில் நடைப்பெற்ற எட்டாவது உலக சைவ மகாநாட்டில் அவரின் சைவ தமிழ் தொண்டுகளைப் பாராட்டிச் 'சைவ சித்தாந்தக் கலாநிதி' எனும் சிறப்பு பட்டத்தை உலக சைவ பேரவை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 185-186
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 89
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நல்லதம்பி,_வீ._வ.&oldid=168146" இருந்து மீள்விக்கப்பட்டது