ஆளுமை:தம்பிராசா, விசுவநாதர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிராசா
தந்தை விசுவநாதர்
பிறப்பு 1930.04.29
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிராசா, விசுவநாதர் (1930.04.29 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை விசுவநாதர். இவர் 15 வருடங்கள் சிற்ப சாத்திரத்தில் தேர்ச்சி பெற்று விக்கிரக நிர்மாணம் கற்றுச் சிற்பக் கலையில் சிறந்து விளங்கினார்.

யாழ்ப்பாணம் புளியங்கூடல் அம்மன் கோவில் இராஜகோபுரம், பஞ்சதள ராஜகோபுர நிர்மாணங்களான அடைக்கலம் தோட்டம் கந்தசாமி கோவில் இராஜகோபுரம், இணுவில் சிவகாமி அம்மன் கோவில் இராஜகோபுரம், யாழ்ப்பாணம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோவில் இராஜகோபுரம், உரும்பராய் கருணாகரப் பிள்ளையார் கோபுரம், திரிதள இராஜ கோபுர நிர்மாணங்களான வட்டுக்கோட்டை அடைக்கலம் தோட்டம் மேற்கு வாயில் இராஜகோபுரம், சுழிபுரம் ஓடையம்பதி வைத்தீஸ்வரர் ஆலய இராஜகோபுரம் உட்பட 50 இற்கும் மேற்பட்ட இராஜகோபுரங்களை நிர்மாணித்துள்ளார்.

இவர் 1981 இல் சிற்பக் கலாபூஷணம், 1984 இல் சிற்பக் கலா சிரோன்மணி, 1986 இல் சிற்பக் கலா சிந்தாமணி, 1981 இல் சிவாலய நிர்மாணக் கலாமணி, 2000 இல் சிற்பக் கலைமாமணி, 2007 இல் சிற்பக் கலாநிதி, 2008 இல் கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 250