"ஆளுமை:அல்லின் ஏபிரகாம், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அல்லின் ஏபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அல்லின் ஏபிரகாம், சு.|
+
பெயர்=அல்லின் ஏபிரகாம்|
 
தந்தை=சுப்பிரமணியம்|
 
தந்தை=சுப்பிரமணியம்|
 
தாய்=பார்வதி|
 
தாய்=பார்வதி|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1922|
 
இறப்பு=1922|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=ஆசிரியர்|
+
வகை=கல்வியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
அல்லின் ஏபிரகாம் காரைநகரிலே பயிரிக்கூடல் எனும் குறிச்சியிலே சுப்பிரமணியம் பார்வதி தம்பதிகளின் மகனாக 1865ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் 1876ம் ஆண்டிலே ஏற்பட்ட பஞ்சம், கொள்ளைநோயினால் இறந்துவிட்டனர்.  
+
அல்லின் ஏபிரகாம், சுப்பிரமணியம் (1865 - 1922) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர்.  இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பார்வதி. இவரது பெற்றோர் 1876ம் ஆண்டிலே ஏற்பட்ட பஞ்சம், கொள்ளைநோயினால் இறந்துவிட்டனர்.  
  
சிறுவராக இருந்த இவர் அமெரிக்க மிஷனரிமாரின் தெல்லிப்பளையில் உள்ள விடுதிப் பாடசாலையிற் சேர்ந்து படித்தார். கல்விப்புலமை காரணமாக ஆசிரியர் பயிற்சிச் சாலையில் சேர்க்கப்பட்ட இவர் 1883ல் கல்வி அதிபதியின் சான்றுடன் பயிற்சி பெற்ற இரண்டாந்தரப் பத்திரம் பெற்று பயிற்சி சாலையிலிருந்து வெளியேறினார்.  
 
23:05, 7 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அல்லின் ஏபிரகாம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் பார்வதி
பிறப்பு 1865
இறப்பு 1922
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அல்லின் ஏபிரகாம், சுப்பிரமணியம் (1865 - 1922) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பார்வதி. இவரது பெற்றோர் 1876ம் ஆண்டிலே ஏற்பட்ட பஞ்சம், கொள்ளைநோயினால் இறந்துவிட்டனர்.

சிறுவராக இருந்த இவர் அமெரிக்க மிஷனரிமாரின் தெல்லிப்பளையில் உள்ள விடுதிப் பாடசாலையிற் சேர்ந்து படித்தார். கல்விப்புலமை காரணமாக ஆசிரியர் பயிற்சிச் சாலையில் சேர்க்கப்பட்ட இவர் 1883ல் கல்வி அதிபதியின் சான்றுடன் பயிற்சி பெற்ற இரண்டாந்தரப் பத்திரம் பெற்று பயிற்சி சாலையிலிருந்து வெளியேறினார்.

பின்பு ஐந்து வருடம் யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று கலைமாணிப் பட்டதாரியான பின்னர் தெல்லிப்பளை ஆசிரியர் பயிற்சிச்சாலையில் மூன்று வருடங்களுக்கு ஆசிரியராக அமர்ந்திருந்தார். 1896 கல்கத்தா பல்கலைக்கழகத்துப் பட்டதாரியுமானார். 1897 முதல் 1909வரை உதயதாரகைப் பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கினார்.

1910ம் ஆண்டில் தோன்றிய ஆலிஸ் வால் நட்சத்திரம் பற்றி வானியல் ஆராய்ச்சி செய்து பின் நிகழக்கூடிய சங்கதிகளை வெளிக்காட்டியமையால் 12.01.1922ல் இலண்டன் F.R.A.S. என்ற சங்கத்தின் மகிமை அங்கத்தவராகச் சேர்க்கப்பட்ட முதல் இலங்கை மகன் என்ற பெருமைக்குரியவராவார். இவர் வானநூல் வல்லுனராகையால் வானாதிசயங்கள் எனும் நூலை எழுதியுள்ளார். மது விலக்குக்கும்மி, கிறீஸ்தவ தேவாரங்கள், கீர்த்தனங்களையும் பாடியுள்ளார். 1922ம் ஆண்டு யூலை மாதம் 7ம் திகதி மரணமடைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 301-302