நிறுவனம்: கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 30 மார்ச் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கிளி/ இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் இராமநாதபுரம்
முகவரி இராமநாதபுரம்
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இலங்கைத்திரு நாட்டின் வடபால் யாழ்.மாவட்டத்தில் விவசாயம் செழிக்கவென கிளிநொச்சி எனும் ஊரில் உருவாக்கப்பட்டு அரச அதிபர் சிறிக்காந்தா அவர்களால் 1955 ஆம் ஆண்டில் குடியேற்றிய குடியேற்றத்திட்டமாம் இராமநாதபுரம் கிராமத்தில் இக்கிராம விவசாயிகளின் பிள்ளைகள் கல்வியிலே உயரவென அரசால் அமைக்கப்பட்ட பாடசாலைக்கட்டடம் கொலணி அதிபர் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் காலமதில் 02.05.1956 ஆம் ஆண்டில் திரு. எஸ். நமசிவாயம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கல்வி இலாகாவால் யாழ்/இராமநாதபுரம் வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டு பழைய கண்டி வீதிக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டதே கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு திரு.எஸ்.கனகசுந்தரம் எனும் தலைமை ஆசிரியர் பொறுப்பில் கையளிக்கப்பட்டது.அmக்காலத்தில் தரம் 5 வரையே வகுப்புக்கள் நடைபெற்றன. ஆரம்ப காலத்தில் 90 மாணவர்கள் வரை கற்கத் தொடங்கினர். அதிபரின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக திருமதி.மாணிக்கம், திருமதி. பொன்னம்மா ஆகிய இரு பெண் ஆசிரியர்கள் கடமையாற்றி வந்தனர் என்றும் முதற் பெண் ஆசிரியரான திருமதி.மாணிக்கம் அவர்கள் இவ்வூர் மக்களால் மாணிக்கக்கா என செல்லமாக அழைக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு மேலான காலம் பாலர் பிரிவில் கடமையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். பாடசாலையில் சேர்விலக்கம் வழங்கிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட போது கற்ற மாணவர்களிடையே பாலர் பிரிவில் அக்காலத்தில் அரிவரி என அழைக்கப்பட்ட வகுப்பில் இருந்த நடராசா ஆனந்தநாயகி என்பவரையே முதலாவது இலக்கத்தில் பதிவு செய்தனர். இக்காலத்தில் இருந்த ஆசிரியர்களுடன் திரு.திருமதி. சிதம்பரப்பிள்ளை ஆகிய இருவரும் இப்பாடசாலைக்குப் பணியாற்ற வந்தனர். வளர்ந்து வரும் இப்பாடசாலையை1960 ஆம் ஆண்டில் திரு. T.சங்கரப்பிள்ளை எனும் அதிபர் பொறுப்பேற்றார். இவர் குடியேற்றவாசிகளின் வீடு தோறும் சென்று அவர்களுடன் கலந்துரையாடி இப்பாடசாலை வளர்ச்சிக்காக மேலும் பல மாணவர்களை இணைத்துக் கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கை 150 இற்கு மேற்பட்டது. கற்றல் செயற்பாட்டுடன் இயைப்பாடவிதானச் செயற்பாட்டிலும் ஊக்கம் காட்டினார். வகுப்புக்கள் 8 வரை உயர்த்தப்பட்டன. இல்லங்கள் பிர்த்து விளையாட்டுப்போட்டி நடத்தினார்.பச்சை,சிவப்பு, மஞ்சள் என்ற நிறங்களிலே பாரதி, நாவலர், விவேகானந்தர் என்று இல்லங்களுக்குப் பெயர் சூட்டிய வருடம் இவருடையதே.இப்பாடசாலைச் செயற்பாடுகளுக்கெல்லாம் அக்காலக் கொலனி அதிபர் கிருஷ்ணப்பிள்ளை சேதுராஜா ஓவசியர் என்பவர் பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்த அவர்கள் விடுதிகளிலிருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர்.ஊரின் உதலவி பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரப்பிள்ளை ,அவர்கள் கலை விழாவும் நடத்தினார்.,வரது காலத்திலேதான் திரு. திருநாவுக்கரசு ஆசிரியரும் கடமையாற்றினார்.1962ஆம் ஆண்டிலேயே இவ்வூர் முதலாவது கலைவிழாவைக் கண்டது.இப்பாடசாலையிலேயே இவ் அதிபரை மக்கள் உவந்தேற்றிருந்தனர் என்பதை 1963 ஆம் வருடம் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற போது ஊர்கூடி நடாத்திய பிரியாவிடை வைபவம் சான்றாகும்.இவருடைய காலத்தில் பாடசாலைக்கு வருகை தந்த சைவபட பெரியார் ஆசியஜோதி முத்தையா அவர்களால் நாட்டப்பட்ட பலாமரம் இன்றும் பாடசாலைப் பிரதான மண்டபத்தின் முன்பக்கம் காட்சி தருவதுடன் இனிய கனிகளையும் தந்து நிற்கின்றது. 1963 ஆம் ஆண்டில் வகுப்புக்கள் PROSSC வரை உயர்தப்பட்டது. அதன் பின்னர் SSC வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் இக்கிராம மக்கள் தமது சொந்த ஊர்களில் படித்த பிள்ளைகளையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.இவருடைய காலத்தில் செல்வி. தமிழரசி சோமசுந்தரம் செல்வன் வல்லிபுரம் செல்வராசா என்பவர்கள் மாணவர்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட மாணவர்களாக இருந்தனர். தமிழரசி கிளிநொச்சி பிரதேச தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி வாகை சூடிப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார்.