ஆளுமை:மகேந்திரன், யேசுதாசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:48, 8 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரன்
தந்தை யேசுதாசன்
தாய் -
பிறப்பு 1949.06.28
ஊர் கிளிநொச்சி, நாச்சிக்குடா
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
 28.6.1949 நாவாந்துறையில் பிறந்தார்.1977 ஆம் ஆண்டு பறபாஸ் பாடுகளின் காட்சி நாடகத்தில் பாத்திரமேற்று நடித்தார் .300 கலைஞர்கள் சேர்ந்து பாலச்சந்திரன் அவர்களின் நெறியாள்கையில் அருட்தந்தை ரேசன் தலைமையில் இரண்டு நாட்கள் மேடையேற்றப்பட்ட நாட்டுக்கூத்து நிகழ்வில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்த இவர் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக சுமந்து வாழ்கின்ற மேலும் அண்ணாவின் நல்லதங்காள் ஊதாரிப்பிள்ளை வடமோடிக் கூத்து பண்டாரவன்னியன் போன்ற நாடகங்களிலும் நடித்தார். 
             டேனியல் பெலிக்கான் அண்ணாவியார் நெறியாள்கையில் 1995 களில் குறிப்பாக நாவாந்துறை புனித மரியா தேவாலயத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவிற்கு மேடையேற்றப்பட்ட ஊற்றுதல் மூன்று நாள் இடம்பெற்றது 1985 90 காலப்பகுதிகளில் சமூக சீர்திருத்த நாடகங்கள் நகைச்சுவை நாடகங்கள் என்று நூற்றுக்கு மேற்பட்ட ஆற்றுகைகளை நெறியாள்கை செய்து யாழ்ப்பாணம் வவுனியா கிளிநொச்சி போன்ற இடங்களில் மேடை ஏற்றினார் 2007ஆம் ஆண்டு வன்னி மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கதைகளில் தான் தேவி ஆசிரியை போன்றவர்கள் மத்தியில் இவரும் ஒருவர் என்பது மகிழ்ச்சியான விடயமாக உள்ளது.
                             2010ஆம் ஆண்டு முதல் குடியேற்றம் செய்யப்பட்ட பிற்பாடு தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல் துன்புறுத்தல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நாடகங்களிலும் நடித்து வருகின்றமை பாராட்டப்பட வேண்டியது .
                                            2006,2007,2008 இடப்பெயர்வு காலங்களில் கிளிநொச்சி ரகுமாஸ்டர்,முழங்காவில் கண்ணதாசன் போன்றோர் பழக்கிய அன்னை நிலம் , இனியொரு விதி செய்வோம்,இனியும் நாங்கள் ஓடுவதா போன்ற வீதிநாடங்களில் நடித்தது மட்டுமன்றி 2009 ம் ஆண்டு அருணாசலம் முகாமில் இருந்தபோது  ரகுமாஸ்ரர் எழுதிய சுகநகலம் விழிப்புணர்வு நாடகத்திலும் நடித்து சிறந்த நடிகராக கருதப்பட்டார்.