ஆளுமை:நாகேந்திரன், பஞ்சாபிகேசன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேந்திரன்
தந்தை பஞ்சாபிகேசன்
பிறப்பு 1953.06.27
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேந்திரன், பஞ்சாபிகேசன் (1953.06.27 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை பஞ்சாபிகேசன். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரணதரம் வரை கற்றுப் பின்னர் நாதஸ்வரக் கலையைத் தனது தகப்பனாரிடமும் எம். பி. பாலகிருஷ்ணனிடமும் கற்றார். பின்னர் இந்தியா சென்று கிருஷ்ணமூர்த்திபிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையைப் பயின்றார்.

இவர் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொழும்பு இந்து மகாநாட்டிலும் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதி மாளிகையிலும் தமிழாராய்ச்சி மகா நாட்டிலும் திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகத்திலும் கச்சேரி செய்துள்ளார்.

இவரது திறமைக்காக இவர் 1997 இல் சுவிஸில் நாதஸ்வர இன்னிசை வேந்தன், மலேசிய மக்களால் சுரஞானமணி, 1987 இல் லண்டனில் நாதஸ்வர சிரோன்மணி, தென்மராட்சி மக்களால் நாத மைந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 89