ஆளுமை:சிவகுருநாதன், இரத்தினதுரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுருநாதன்
தந்தை இரத்தினதுரை
பிறப்பு 19331.10.07
இறப்பு 2003.08.08
ஊர் கந்தர்மடம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன், இரத்தினதுரை (1931.10.07 - 2003.08.08) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவரது தந்தை இரத்தினதுரை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பின் மேற்படிப்புக்காகவும், தொழில் காரணமாகவும் கொழும்பில் பல காலம் வாழ்ந்தார். 1955ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாராளுமன்ற நிருபராக பணியாற்றி, பாராளுமன்ற நிகழ்வுகளை பத்திரிகை மூலம் கொண்டு வர வழிவகுத்தார்.

1957ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகி 1961ஆம் ஆண்டு முதல் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கையின் தேசியமட்டப் புதினத்தாள் வரலாற்றில் 33 வருடங்கள் பிரதம ஆசிரியராகப் இருந்த பெருமை இவருக்கு உண்டு. இலங்கைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை சபை ஆகியவற்றில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கை நீதி அமைச்சினால் இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றவர். சிலகாலம்கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த பத்திரிகையாளர் சேவைக்கான விருது, சமூக மாமதி, தமிழ்மணி ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட இவர் தமிழ் மக்களினால் செய்தி மன்னன் என அழைக்கப்பட்டார். இவர் இலங்கை அரசின் அதிவிசேட விருதான கலாசூரி விருதினை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 17
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 57-61