ஆளுமை:நடராஜன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:37, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராஜன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜன்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1933.07.28
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன், வேலுப்பிள்ளை (1933.07.28 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். எஸ். எஸ். சி. வரை கற்ற இவர் இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டு இலக்கியம் சார்ந்த கல்வியை கனகசெந்தில்நாதன், இ. நாகராஜன், ஏ. ரி. பொன்னுத்துரை போன்றோரிடம் பயின்றார்.

1956ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கிய இவர் யாழ்ப்பாணக் கதைகள், ஊரும் உலகும் போன்ற சிறுகதைத் தொகுதிகளையும், வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் 150க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். மேலும் 1981ஆம் ஆண்டிலிருந்து 12 வருடங்கள் கற்பகம் இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி 1986ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இலக்கியப் பேரவை சான்றிதழையும், 2001ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள இலக்கிய நூற் பரிசினையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 35-36