ஆளுமை:சாந்தா, பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தா பொன்னுத்துரை
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொ.சாந்தா யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. ஆரம்ப காலத்தில் நாட்டியக் கலையை ஏரம்பு சுப்பையாவிடமும் பின் கலாஷேத்திரா நடனக் கலையகத்திலும் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்று நடனத் துறையில் டிப்ளோமா பட்டதாரியான இவர் தனது நடன அரங்கேற்றத்தை கலாஷேத்திராவின் இசைக் குழுவினரின் பின்னணி இசையுடன் நிகழ்த்தினார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியராக பணியாற்றிய இவர் நடனத்துறையில் அதியுயர் பட்டம் பெறுவதற்காக இந்தியா சென்று அங்கு வடமாநிலமான நாகலாந்தில் உள்ள நுண்கலைப்பீடத்தில் கற்று M.Phil பட்டம் பெற்று தாயகம் திரும்பி யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் இணைப்பாளராக பணிபுரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 146