ஆளுமை:சிவஞானசேகரம், விஸ்வநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:17, 15 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவஞானசேகர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஞானசேகரம், விஸ்வநாதன்
தந்தை விஸ்வநாதன்
பிறப்பு 1949.07.13
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.சிவஞானசேகரம் (1949.07.13 - ) யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர். இளமையிலிருந்தே இசைத்துறையில் ஈடுபாடு கொண்டு விளங்கிய இவர் பாடசாலையில் கற்கும் பொழுதே பல போட்டிகளில் பங்குபற்றி முதன்மைப் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார். 1981ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் இசையாசிரியராகப் பணியாற்றிய இவர் கொழும்பு விவேகானந்த சபையின் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று தென்னிந்தியா சென்று திருப்பனந்தாள், ஆதீனத்திலும், சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெற்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர். இங்கு இவருக்கு 1977ஆம் ஆண்டு எம்.ஜீ.ஆர். தங்கப்பதகம் முதற்தர சித்திக்காக வழங்கப்பட்டது.

திருப்பனந்தாள் ஆதீனம் இவருக்கு பண்ணிசைவாணர் என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கியுள்ளது. வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியத்தரம் சித்திப்பெற்று கலாவித்தகர் பட்டம் பெற்றுள்ள இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1981ஆம் ஆண்டு இணுவில் இளந்தொண்டர் சபை இவரின் இசைக் கலைப் பணியைப் பாராட்டி பண்ணிசை செம்மல் பட்டம் வழங்கி கௌரவித்தது. இலங்கை வானொலியின் A பிரிவு கலைஞராக விளங்கும் இக் கலைஞர் அங்கும் தனது இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். மற்றும் ஆசிரியப் பணியில் வெள்ளி விழாக் கண்ட இவரை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி தங்கப்பதக்கம் சூடிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 115