ஆளுமை:கமலாசினி, பொன்னப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலாசினி , பொன்னப்பா
தந்தை நாகமணி மருதப்பு
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1902.06.31
இறப்பு 1975.04.16
ஊர் வேலணை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாசினி, பொன்னப்பா (1902.06.31- 1975.0416) வேலனையில் பிறந்தார். இவரது தந்தை நாகமணி மருதப்பு; இவரது தாய் சின்னத்தங்கம். செல்லம்மா என்னும் இயற் பெயரைக் கொண்ட இவர், வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினைக் கமலாசினி என மாற்றிக்கொண்டார்.

தனது 14 ஆவது வயதில் வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும் வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 295-297