"ஆளுமை:வேதநாயகம், சுந்தரமதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(படைப்புகள்)
 
வரிசை 14: வரிசை 14:
  
 
== படைப்புகள் ==
 
== படைப்புகள் ==
* [[அருள்மிகு ஸ்ரீ கடலாட்சியம்மன்]] (ஆலய வரலாறு)
+
* அருள்மிகு ஸ்ரீ கடலாட்சியம்மன் (ஆலய வரலாறு)
* [[மீனுக்குட்டி]]
+
* மீனுக்குட்டி
* [[நல்லநட்பு]]
+
* நல்லநட்பு
* [[கோழியம்மா]]
+
* கோழியம்மா
* [[தூக்கணாங்குருவிகள்]]
+
* தூக்கணாங்குருவிகள்
  
  

06:15, 10 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுந்தரமதி
தந்தை சோமசுந்தரம்
தாய் பூரணமதி
பிறப்பு 1962.08.01
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகம், சுந்தரமதி (1961.08.01) மட்டக்களப்பு பிறந்த எழுத்தாளர், கல்முனை நொச்சியாமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது தந்தை சோமசுந்தரம்; தாய் பூரணமதி. ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு வாழைச்சேனை தேவி வித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம், வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை, சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டமும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முன்பள்ளி டிப்ளோமாவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுமானிப்பட்டமும் பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாநகரசபை முன்பள்ளி ஆசிரியையாகவும் தனது பணியை மேற்கொள்கிறார். கவிதை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, நடனம், நாடகம், ஆலய வரலாற்று நூல் ஆய்வு, கவியரங்கு, விவாத அரங்கு, வில்லுப்பாட்டு போன்ற பன்முகத்திறமைகளைக் கொண்டவர். பாடசாலை நாடகங்களில் நடித்து பரிசில்களும் பெற்றுள்ளார். இவரது ”விடியலை நோக்கி” என்னும் சிறுகதை, தினக்கதிரில் வெளிவந்தமையே இவரின் எழுத்துத்துறை பிரவேசம் எனக்குறிப்பிடுகிறார் சுந்தரமதி. கனடா ஈழநாதம் பத்திரிகையில் இவரின் கவிதை, சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் வர்த்தகச் சேவையில் கவிதைக் களம் நிகழ்வில் சுந்தரமதியின் கவிதைகள் ஒரு மாதம் சுந்தரமதியின் குரலிலேயே ஒலிபரப்பப்பட்டமை விசேட அம்சமாகும். இவரின் ஆக்கங்களான சிறுவர் கதை, பாடலாக்கம், வில்லுப்பாட்டு என்பனவும் பல பரிசில்களை பெற்றுள்ளன. பாடசாலை இலக்கிய மன்றத் தலைவியாகவும், மட்டு தமிழ் எழுத்தாளர் பேரவை செயலாளராகவும், மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினராகவும், திருமறைக் கலாமன்ற நிருவாக உறுப்பினராகவும், கல்லடி நூலக வாசகர் வட்ட நிருவாக உறுப்பினராகவும், விழுது ஆற்றல் மேம்பாட்டு நிருவாக உறுப்பினராகவும் அங்கம் வகித்து பல இலக்கியத்துறை பங்களிப்புக்ளை ஆற்றி வருகிறார். அம்மா, பாதி, செல்லமே, சின்னான் ஆகிய குறுந்திரைப்படங்களிலும் சுந்தரமதி நடித்துள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு வேதநாயகம், சுந்தரமதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • அருள்மிகு ஸ்ரீ கடலாட்சியம்மன் (ஆலய வரலாறு)
  • மீனுக்குட்டி
  • நல்லநட்பு
  • கோழியம்மா
  • தூக்கணாங்குருவிகள்