பகுப்பு:பாலம்

From நூலகம்

பாலம் இதழ் ஈழ நண்பர்கள் கழக மாத இதழாக 1986 முதல் வெளியானது. இதன் ஆசிரியராக இரா. திரவியம் செயற்பட்டார். இந்த இதழ் ஈழ மக்களுக்காக இந்தியாவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. ஈழ மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், ஈழ பிரச்சனை, ஒடுக்குமுறை, சிங்கள பேரினவாத கொடுமைகள், அரசியல், அகதிகளின் துன்பங்கள், தமிழர் அடையும் இன்னல்கள் என்பவற்றோடு கவிதைகளையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. ஈழமக்கள் அடையும் துன்பங்களை வெளியுலகுக்கு காட்டும் வகையில் இந்த இதழ் வெளியானது.