நிறுவனம்:பொது நூலகம் - உப்புவெளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொது நூலகம் - உப்புவெளி
வகை நூலகம்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் உப்புவெளி
முகவரி பொது நூலகம், திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, உப்புவெளி, திருக்கோணமலை
தொலைபேசி 0262050316
மின்னஞ்சல் uppuvelilibrary@gmail.com
வலைத்தளம்

1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரதேச சபை நூலகம் இதுவாகும். இது திருக்கோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் அமைந்துள்ள கதிர்காமத்தம்பி வீதியில் திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை வளாகத்தினுள் இரண்டு மாடி கட்டிடங்களைக் கொண்ட தரம் 2 நூலகமாக உள்ளது. இங்கு சுமார் 12,868 புத்தகங்கள் காணப்படுவதுடன், சிறுவர் பிரிவு, உசாத்துணை பிரிவு, கணினி பிரிவு, கல்வி கற்கும் பகுதி, வாசிப்பு பகுதி என பல பிரிவுகளைக் கொண்டு காணப்படுகின்றது. இங்கு 2,189 பதிவு செய்யப்பட்ட வாசகர்கள் காணப்படுகின்றனர். மேலும் குறித்த நூலகத்தை திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகத்தின் தற்போதைய நூலகராக திரு. K. வரதகுமார் பணியாற்றி வருவதுடன், இரண்டு உப ஊழியர்களையும் கொண்டு இந்த நூலகம் இயங்கி வருகின்றது.

வருடாந்தம் வாசிப்பு மாதம், கருத்தரங்கு, பாடசாலை நடமாடும் சேவை, சிறுவர் நிகழ்ச்சிகள் என பல்வேறுபட்ட சமூகமட்ட செயற்பாடுகளை குறித்த நூலகம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிப்பு மாதத்தில் தொடர்ச்சியாக கடந்த 10 வருடங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வந்தமையால், இந்த நூலகத்திற்கு 2021 ஆம் ஆண்டு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையுடன் இணைந்து, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தால் "டிஜிட்டல் நூலக திட்டம்" வழங்கப்பட்டு கணனி பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் முற்று முழுதாக திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இயங்கி வருவதுடன், இந்த நூலகத்திற்கான நிதி வசதிகள் பூரணமாக பிரதேச சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நூலகத்தின் தொலைநோக்கு ஆனது, பிரதேச மக்களின் அறிவு வளர்ச்சி தேடலுக்கான தகவல்களை சேகரித்து, ஆவணப்படுத்தி, தேவையான வாசகர்களுக்கு, தேவையான நேரத்தில், தேவையான உண்மை தகவல்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான ஏணிப்படிகளாக நூலகத்தை முதன்மைபடுத்தல் ஆகும்.

மேலும் இந்த நூலகத்தின் குறிக்கோள், தொலைநோக்கை அடைந்து கொள்வதற்காக சபையின், நிதி, நிர்வாகம், ஆளணி மற்றும் பௌதீக வளங்களை வினைத்திறனாகவும், செயற்திறனாகவும் பயன்படுத்தி, மக்களின் கல்வி, அறிவு வளர்ச்சிக்காக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், வாசவர்களுக்கான அறிவு சாதனங்களை தேடிப் பெற்று, ஒழுங்கமைத்து, பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் நூலக இலக்கை அடைவதற்கான உச்ச சேவைகளை வழங்கல் ஆகும்.

இந்த நூலகம் திருக்கோணமலையின் தமிழர் பகுதியில் காணப்படும் பிரதான நூலகம் ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Email - uppuvelilibrary@gmail.com