நிறுவனம்:திருக்கோணமலை கன்னியா வெண்ணீரூற்று

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருக்கோணமலை கன்னியா வெண்ணீரூற்று
வகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்
நாடு இலங்கை
மாவட்டம் திருக்கோணமலை
ஊர் கன்னியா
முகவரி கன்னியா வெண்ணீரூற்று, கன்னியா, திருக்கோணமலை
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


திருக்கோணமலை கன்னியா வெண்ணீரூற்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும். இது திருகோணமலையின் புகழ்மிக்க திருக்கோணேச்சர ஆலயத்துடன் வரலாற்று ரீதியில் தொடர்புடையதாகவும், சோழ மன்னர்களால் தமிழ் பிராமணர்களுக்கு பௌத்த மதத்தை கற்பிப்பதற்காக அமைக்கப்பட்ட "இராஜராஜ பெரும்பள்ளி" எனப்படும் கன்னியாவுக்கு அண்மையில் உள்ள தொல்பொருள் சிறப்பு மிக்க பகுதியுடனும் தொடர்புடைய ஒரு இடமாகும்.

இதிகாசங்களின் அடிப்படையில் இலங்கையை ஆண்ட சிவபக்தனான இராவணன், தனது தாயார் அமர்த்தும் அடைந்தவுடன் தாயாருக்கான இறுதி கிரியைகளை சிறப்பாக செய்வதற்காக தனது வாலினால் ஏழுமுறை நிலத்தில் குற்றிய இடங்களில் 7 வெண்ணீரூற்று தோன்றியதாக குறிப்பிடுகின்றன.

மேலும் கன்னியா வெண்ணீரூற்றில் காணப்படும் ஏழு கிணறுகளும் 5 தொடக்கம் 8 அடிகள் இடைவெளியில் காணப்பட்டாலும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் வெண்ணீரின் சூடு வேறுபடுகின்றது. உலகின் பல இடங்களில் வெண்ணீரூற்றுக்கள் காணப்பட்டாலும், இந்த ஏழு வெண்ணீரூற்றுகளும் சற்று வித்தியாசமானதாகவே காணப்படுவது, அங்கு சென்று அவதானிக்கும் அனைவரும் அறிவார்கள்.

மேலும் குறித்த வெண்ணீருற்றுக்கு அண்மையில் சிவன் ஆலயம் ஒன்றும், பிள்ளையார் ஆலயம் ஒன்றும் காணப்படுகின்றது. இந்தப் பிள்ளையார் ஆலயம் புனர் நிர்மாணத்திற்காக உடைக்கப்பட்டு, புனர் நிர்மாணம் செய்வதற்கிடையில் அரசினால் தொல்பொருள் திணைக்களம் மூலம் குறித்த பகுதி கையகப்படுத்தப்பட்டு, பிள்ளையார் ஆலயம் மீள அமைக்கப்படாமல் இன்றும் காணப்படுகின்றது.

எனினும் சிவன் ஆலயத்தில் விசேட தினங்களில் வழிபாடுகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவெம்பாவை, சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை போன்ற தினங்களில் குறித்த சிவன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெறுகின்றன.

மேலும் திருக்கோணமலை மக்களைப் பொருத்தவரை அமரத்துவம் அடைந்த தங்களுடைய உறவுகளுக்கு இறுதிக்கிரியைகள், பிதிர் தர்ப்பணம் போன்றவற்றை செய்வதற்கு மிகவும் உகந்த இடமாக கன்னியா வெண்ணீரூற்று காணப்படுகின்றது.