ஆளுமை:ஸ்ரீவாமதேவன், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீவாமதேவன்
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு 1948.12.21
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீவாமதேவன், பொன்னுத்துரை (1948.12.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், ஆரம்பத்தில் கொக்குவில், நாச்சிமார் கோவில் கீதாஞ்சலி நல்லையாவிடம் இசை பயின்று பின்னர் வட இலங்கை சங்கீத சபையில் 3 ஆம் வகுப்பு வரை பருத்தித்துறை துரைராஜாவிடமும் ஆசிரியர் தரம் வரை மானிப்பாய் ஐயாக்கண்ணு தேசிகரிடமும் பயின்றார். இவர் 1970 இல் சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து 1975 வரை பயின்றார்.

இவர் 1975 இல் கல்முனை வெஸ்லி கல்லூரியில் இசையாசிரியராக நியமனம் பெற்று 1978 இல் ஆசிரியர் கலாசாலையில் சங்கீத விஷேட பயிற்சி நெறியில் பயிற்சி பெற்று 1980 ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலும் 1985 இல் சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் 2000 ஆம் ஆண்டு யூனியன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது இசை ஆளுமைக்காகச் 'சங்கீத வித்துவான்' பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65