ஆளுமை:ஸ்ரீஞானஸ்வரன், ராமநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராமநாதன் ஸ்ரீஞானஸ்வரன்
தந்தை ராமநாதன்
தாய் நாகமணி
பிறப்பு 1972.10.15
ஊர் திருக்கோணமலை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திரு. ராமநாதன் ஸ்ரீஞானஸ்வரன் எனப்படும் "கண்ணன்" அவர்கள் திருக்கோணமலையைச் சேர்ந்த பன்முக ஆளுமையாளர் ஆவார். இவர் 15.10.1972 கிளிநொச்சியில் ராமநாதன் மற்றும் நாகமணி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள். இவரது தந்தை நீர்ப்பாசன திணைக்களத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியதுடன், இவர்களது சிறு வயதிலேயே வடக்குக் கிழக்கின் மற்றும் இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். எனினும் ஆரம்ப காலத்தை கிளிநொச்சியில் கழித்ததுடன், அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை நோக்கி நகர்ந்திருந்தார்.

இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை நகரில் தனது தொழில் மற்றும் கல்வி நிமித்தம் தனது வாழ்க்கையை ஆரம்பித்ததுடன், திருக்கோணமலை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை தொடர்ந்தார். திருக்கோணமலையை பொறுத்தவரை ஒரு சிறுகதை ஆசிரியராகவும், கவிதை ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், அரசியல்வாதியாகவும் என பல ஆளுமைகளாக அறியப்பட்டுள்ளார். இவர் மாயன், சஞ்சுதன், பொறியான் எனும் புனைபெயர்களில் அறியப்பட்டுள்ளார்.

இவரது முதலாவது நூலாக "வணிகச் சட்டம்" எனும் நூலும், அதனைத் தொடர்ந்து "அவனும் அதுவும்" சிறுகதை தொகுப்பும், அதனைத் தொடர்ந்து "சிறையிலிருந்து மடல்கள்" கவிதை தொகுப்பும், அதன் பின்னர் "பன்னாட்டு குற்றங்கள்" எனும் நூலும், இறுதியாக "நூறு மின்னல்கள்" சிறுகதை தொகுப்பு ஆகியவற்றை தனது படைப்புகளாக வெளியிட்டுள்ளார்.

மேலும் "மலைமுரசு" என பெயரில் திருக்கோணமலையில் இருந்து வெளிவந்த பத்திரிக்கையின் ஆசிரியராகவும், அந்த பத்திரிகையை நடாத்தி சென்றவராகவும், பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்டவுடன், சிறந்த கருத்துருவாக்கியாவும் திருக்கோணமலையில் அறியப்பட்டுள்ளார்.தொழில் ரீதியாக பட்டைய கணக்காளராக தற்சமயம் இயங்கி வருகிறார்.