ஆளுமை:வேல் அமுதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ள அமுதலிங்கம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1938.10.30
ஊர் மாயெழு, குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல் அமுதன் (1938.10.30) மாயெழு, குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலுப்பிள்ள அமுதலிங்கம். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் வெண்ணிலா, சன்மார்க்கத் தீபம் போன்ற கையெழுத்துப் பத்திரிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இளம் வயதிலேயே சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள் முதலிய கலை இலக்கிய வடிவங்களில் ஆர்வம் மிக்கவர். 1954களில் சிறுகதை உலகில் பிரவேசித்த இவர் பல சிறுகதைகளை ஈழத்தின் பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் படைத்துள்ளார். அறுவடை, வைகறை, மாரீசம், வாழும்வழி, ஓர்மம், திருமண அசற்றுப்படித்தினர், கிழிசல் ஆகியவை இவரது நூல்களாகும். இதில் ‘மாரீசம்’ என்ற சிறுகதைத் தொகுதி 1978ம் ஆண்டிற்கான இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. இலங்கை அறிவு இயக்கம் (அறிவகம்), தமிழ் கலைஞர் வட்டம் (தகவம்), வள்ளுவர் மாமன்றம், மதி கலைஞர் வட்டம் (மகவம்),வேல் வெளியீட்டகம் போன்ற இலக்கிய அமைப்புக்களை உருவாக்கி கலை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1028 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 13283 பக்கங்கள் IX-XIX
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேல்_அமுதன்&oldid=197870" இருந்து மீள்விக்கப்பட்டது