ஆளுமை:வேலுப்பிள்ளை, த.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, த. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் 1974 ஆம் ஆண்டு ஓவியம் என்ற நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் பரவலாக அறிமுகமானார். இந்நூல் கரவெட்டி மக்கள் ஒன்றியத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இவர் கரவைவேலவன் என்ற புனைபெயரைக் கொண்டவர்.

இவரது அபிப்பிராயப்படி ஓவியம் ஓர் உலகமொழியாகும். ஓவியத்தைப் பொறுத்தவரையில் மேலைத்தேய உத்திமுறைகளைக் கீழைத்தேய உள்ளத்துணர்வுடனும் ஆக்கச்சக்தியுடனும் இணைப்பதன் மூலம் உயிரோட்டமான ஓவியங்களை வரையலாம். புகைப்படக் கருவியால் எண்ணங்களைப் படம் பிடித்துக் காட்ட முடியாது. ஓவியமே அதனைச் செய்யும் எனக்கருதுகின்றார். இவர் கரவைவேலன், கந்தமுருகேசரின் பிரதிமை, வள்ளுவர், காதல், எல்லையில்லா ஆனந்தம், முருகன், விநாயகர், இயற்கைக் காட்சி எனப்பல தைலவர்ண ஓவியங்களை வரைந்தார் என அறியக்கிடக்கின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 16-17


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேலுப்பிள்ளை,_த.&oldid=196917" இருந்து மீள்விக்கப்பட்டது