ஆளுமை:விவேகானந்த முதலியார், சிதம்பரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விவேகானந்த முதலியார்
தந்தை சிவசிதம்பரம்பிள்ளை
தாய் விசாலாட்சி அம்மையார்
பிறப்பு 1920.11.12
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விவேகானந்த முதலியார், சிவசிதம்பரம்பிள்ளை (1920.11.12 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவசிதம்பரப்பிள்ளை; தாய் விசாலாட்சி அம்மையார். இவர் கல்லடி உப்போடை வித்தியாலயத்திலும் சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி கற்று அர்ச். அகுஸ்தீனார் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இவர் பின்னர் 1947 இல் கல்முனை சென்று மேரிஸ் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். அன்றிலிருந்து முப்பத்தொரு வருடங்களுக்கு மேலாக ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் சித்திரை வருடப் பிறப்பு போன்ற பண்டிகைக் காலத்தில் மயான காண்டம், ஒட்டக் கூத்தர் சரிதம், குமணன் சரிதம் முதலிய நாடகங்களைத் தயாரித்துப் பழக்கி அரங்கேற்றியுள்ளார். மேலும் வைரவ சுவாமி காவியம், மாரியம்மன் உற்பத்தி, மரணச் சடங்குப் பாடல்கள், கந்தசஷ்டி விரதப் பாடல்கள், சிவராத்திரி விரதப் பாடல்கள், மாரியம்மன் சின்னக் காவியம், மாரியம்மன் கும்மி, எண்ணெய்ச் சிந்து பாடல், இவற்றுடன் சில தொகுப்பு நூல்களையும் படைத்துள்ளார். அத்தோடு பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 95-101