ஆளுமை:யோகராசா, கதிரவேலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகராசா
தந்தை கதிரவேலு
பிறப்பு 1939.10.18
ஊர் சுண்டுக்குளி
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகராசா, கதிரவேலு (1939.10.18 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞன். இவரது தந்தை கதிரவேலு. இவர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு, பல போட்டிகளிற் பங்குபற்றி முதற்பரிசும் பெற்றார்.

இவர் பொறியியற் துறைப் பட்டதாரியானதுடன் லண்டன் பொறியியல் ஆலோசனைச் சபைப் பட்டதாரியாகவும் ஆசிய தொழில்நுட்ப நிலையப் பட்டதாரியாகவும் பாங்கொக், தாய்லாந்து ஆகிய இடங்களில் பட்டங்கள் பெற்றவருமாவார். இவர் ஈழத்தில் வெளிவரும் தமிழர் நாளேடுகள், வாரவெளியீடுகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தனது கவியாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்த இவர், நாட்டில் ஏற்பட்ட அசாதரண நிலைமை காரணமாக அப்பத்திரிகையின் வெளியீட்டை இடை நிறுத்திக் கொண்டார். இவருக்கு 1982 ஆம் ஆண்டு திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு விழாவில் சீரிய கவிஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டதுடன் 1988 ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உலகக் கவிஞர் விருதையும் 1994 ஆம் ஆண்டு கனடிய தமிழ் பண்பாட்டுக் கழகம் தமிழ்காக்கும் கவிஞர் என்ற விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 25


வெளி இணைப்புக்கள்