ஆளுமை:யசோதா, பாலச்சந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யசோதா
தந்தை பாலச்சந்திரன்
தாய் மகேஸ்வரி
பிறப்பு
ஊர் இணுவில்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதா, பாலச்சந்திரன் யாழ்ப்பாணம், இணுவிலில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை பாலச்சந்திரன்; தாய் மகேஸ்வரி. Art and Design பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் 2015ஆம் ஆண்டு முடித்துள்ளார். இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் கைவினைத் தயாரிப்புத் துறையில் Visiting Instructor ஆக மாணவர்களுக்குக் கற்பித்து வருகின்றார்.

தனது சூழலில் கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருள்களையும் உருவாக்கி வருகிறார். பொருட்களின் வடிவமைப்புக்களை இணையத்தைப் பார்த்துக் கற்றுக்கொண்டு அவற்றைச் சிறப்பாகச் செய்து வருகிறார். குழந்தைகளுக்குத் தேவையான சிறிய அணிகலன்கள், கைப்பணிப் பொருட்களை ஆரம்பத்தில் உருவாக்கினார். தற்பொழுது பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலைகளில் இருந்து பல்வேறு வகையான மாலைகளையும் செய்து வருகிறார். நெல்மணிகளைக் கொண்டும் கழுத்தணி செய்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றார் யசோதா. இவரின் ஊரில் இதற்குரிய பொருட்களுக்கு சந்தைவாய்ப்பு இல்லை என்பதால் இவர் பங்கேற்கும் கண்காட்சிகளில் சிங்கள மக்கள், வெளிநாட்டவர்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்குவதாகத் தெரிவிக்கின்றார். அணிகலன்களுடன் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து அட்டைகளையும் தாயரித்து வருகிறார். ஓவியங்களையும் உருவாக்கி வருகிறார். காலத்திற்கு ஏற்றாற்போலவும் சந்தை வாய்ப்பை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றாற்போலவும் இவர் வடிவமைப்புக்களை கற்றுக்கொண்டு அணிகலன்களை உருவாக்கி வருகிறார். புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றார் யசோதா. இவருக்குத் தெரிந்த கைவினைப் பொருட்களை செய்யும் முறையை ஆர்வமுள்ளவர்களுக்கு தொலைக்காட்சிகளிலும் நேரிலும் சொல்லிக்கொடுத்து வருகிறார். எதிர்காலத்தில் அணிகலன்கள், கைவினைப் பொருள்கள் காட்சியறை திறக்கும் எண்ணமும் உள்ளதாகத் தெரிவிக்கின்றார் யசோதா.


வெளி இணைப்புக்கள்

  • [http://srilankamuslims.lk/test-author-5939/ யசோதா பாலச்சந்திரன் தொடர்பான கட்டுரை ஸ்ரீலங்காமுஸ்லிம் இணையத்தில்)