ஆளுமை:முருகானந்தம், கதிரைவேற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகானந்தம்
தந்தை கதிரைவேற்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1948.03.27
ஊர்
வகை மருத்துவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகானந்தம், கதிரைவேற்பிள்ளளை (1948.03.27 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வியாபாரிமூலையைச் சேர்ந்த எழுத்தாளர், மருத்துவர். இவரது தந்தை கதிரைவேற்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. இவர் மேலைப் புலோலி சைவ பாலிகா பாடசாலை, மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலை, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 1975 ஆம் ஆண்டு M.B.B.S பட்டமும் 2003 ஆம் ஆண்டு குடும்ப வைத்தியத் துறையில் டிப்ளோமாப் (DFM) பட்டமும் பெற்றார். இவர் 1975 ஆம் ஆண்டு முதல் அரச வைத்தியசாலைகளிலும் பின்னர் 1980 ஆம் ஆண்டு முதல் குடும்ப வைத்தியராகவும் பணியாற்றினார்.

இவரது நலவியற் கட்டுரைகள் இலங்கையில் அனைத்து முக்கிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. இவர் மல்லிகை, ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம் போன்ற பல சஞ்சிகைகளில் சிறுகதைகளையும் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் நீண்ட காலம் நலவியல் நிகழ்ச்சிகளை நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புக்களாக அனுபவக் குறிப்புகள், டொக்டரின் டயறியிலிருந்து (சிரித்திரன் 1986-87), டொக்டரின் கிறுக்கல்கள் (மல்லிகை), வைத்தியக் கட்டுரைகள் (வீரகேசரி, தினகரன், முரசொலி, ஈழநாடு, ஈழநாதம், தினக்குரல், இருக்கிறம், ஜீவநதி), நலவியல் பத்தி எழுத்துக்கள் வைத்திய கலசம் (முரசொலி), ஹாய் நலமா (தினக்குரல்), இலக்கியக் கட்டுரைகள் (மல்லிகை, ஞானம், ஆதவன்) ஆகியன காணப்படுகின்றன. இவர் ரூபவாஹினியில் (EYE Channal) பல வருடங்களாக ஞாயிறு தோறும் நலவியல் நிகழ்ச்சியையும் சக்தி தொலைக்காட்சியில் பல நலவியல் உரைகளையும் இலங்கை வானொலியின் தேசிய ஒலிபரப்பில் நலமாக வாழ்வோம் நிகழ்ச்சியையும் படைத்துள்ளார்.

இவர் சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர், தாயாகப் போகும் உங்களுக்கு, எயிட்ஸ், பாலியல் நூல்கள், போதையைத் தவிருங்கள், வைத்தியக் கலசம், நீங்கள் நலமாக, எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள், நலமாக வாழுங்கள், சாமி காட்டிய ஆரோக்கிய வாழ்வு, கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி, உயர் இரத்த அழுத்த நோயைக் கவனத்தில் எடுங்கள் போன்ற நலவியல் நூல்களையும் டொக்டரின் டயறியிலிருந்து, மறந்து போகாத சில ஆகிய இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது ஆளுமைகளுக்கு இலங்கைத் தேசிய சாகித்திய விருது, யாழ் இலக்கிய வட்டப் பரிசு, கொழும்புப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கச் சிறந்த தமிழ் வலைப் பதிவாளருக்கான விருது ஆகிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

முருகானந்தம், கதிரைவேற்பிள்ளளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 07-09
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 132-135
  • நூலக எண்: 1649 பக்கங்கள் 38