ஆளுமை:முத்துவேல், கணபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துவேல்
தந்தை கணபதி
தாய் கண்ணமுத்து
பிறப்பு 1957.07.13
இறப்பு -
ஊர் கொலனி,களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை வேட மதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதி முத்துவேல் (1957.07.13) நெடியமடு, களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்த வேட மதகுரு ஆவார். இவரது தந்தை கணபதி;தாய் கண்ணமுத்து. இவரது மனைவி திரவியம். இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் ஐந்து வரைக்கும் களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இவரது தந்தையார் மட்டக்களப்பு கல்குடா வழியில் வந்த வேடர் பரம்பரையாகக் காணப்படுகிறார். குறித்த கிராமத்தில் இன்று வரைக்கும் சகலவிதமான குணமாக்கல் நடவடிக்கைகளையும் எதுவித பண உதவிகளும் பெறாமல் நடாத்தி வருகின்றார். தமது சமூகம் சார்ந்த வேடர் மொழிப் பிரயோகங்கள் எனும் போது அவர்தம் சடங்கு நடவடிக்கைகளில், அவர்களினால் கடவுளராகக் கருதப்படும் அனைத்துக் கடவுளருக்குமான அழைப்புப் பாடல்கள், மன்றாட்டு அழைப்புக்கள் என்பவற்றினை ஓரளவு வேட மொழியில் பாடக்கூடியவராகவும் காணப்படுகின்றார். அத்துடன் ஒரு நபருக்கு உண்டாகியிருக்கும் நோய்க்கு ஏற்ப கைமருந்து மற்றும் இயற்கை முறை மருந்து நிவாரணங்களையும் செய்யக்கூடியவராகவும் இவர் காணப்படுகிறார்.