ஆளுமை:முத்துலிங்கம், அப்பாத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துலிங்கம்
தந்தை அப்பாத்துரை
தாய் இராசம்மா
பிறப்பு 1937.01.19
ஊர் கொக்குவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துலிங்கம், அப்பாத்துரை (1937.01.19 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அப்பாத்துரை; தாய் இராசம்மா. கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான படிப்பை முடித்து, இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும் இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாகப் பல நாடுகளுக்குப் பயணித்த இவர், ஏறத்தாள இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றினார்.

இவரின் முதற் சிறுகதைத் தொகுப்பான 'அக்கா' க. கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964 இல் வெளியானதுடன் திகடச்சக்கரம் (1995), வம்சவிருத்தி (1996), வடக்கு வீதி (1998), மகாராஜாவின் ரயில் வண்டி (2001), அ. முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள், முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை), அமெரிக்கக்காரி (2009) ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அங்கே இப்ப என்ன நேரம்? (2005), பூமியின் பாதி வயது (2007), கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கின்றது ( 2006), அமெரிக்க உளவாளி (2010), ஒன்றுக்கும் உதவாதவன் (2011) ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் வியத்தலும் இலமே (2006) என்ற நேர்காணல் நூலையும் வெளியிட்டுள்ளார்.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளைக் குழுமத்தில் முக்கிய உறுப்பினராகச் செயலாற்றி வரும் இவருக்கு, கனடா தமிழர் தகவல் இதழ் 'நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை' விருதை 2006 இல் வழங்கிக் கெளரவித்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 133-134
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 61


வெளி இணைப்புக்கள்