ஆளுமை:பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர்
பிறப்பு 1923
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலிப்ஸ் ஒஸ்ரின் அமிர்தநாதர் (1923 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர், சிற்பக் கலைஞர். கலைப்புலவர் நவரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவர், 1955 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சிற்ப ஓவியக் காட்சிகளில் பங்கு கொண்டவராவார்.

இவர் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று, சில காலம் இலங்கை அரசாங்கத்தின் கைத்தொழிற் துறைப் போதனாசிரியராகக் கடமையாற்றிப் பின்பு பரியோவான் கல்லூரியிலும் 1958 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணக் கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் பிரதிமை ஓவியம், நிலைப்பொருள் ஓவியம், காட்சித் சித்தரிப்பு எனப் பல வகையான ஓவியங்களை வரைந்துள்ளார்.

இவரிடம் வெண்களியினாலான நடராஜர் சிலையும் களியினாலான புத்தர் சிலையும் உண்டு. இவரது சிற்பங்கள் பலராலும் விதந்து போற்றப்பட்டவை. இவர் 1955 ஏப்ரலில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்திய ராதா கிருஷ்ணன் சிலை பற்றியும் 1957 இல் நடைபெற்ற ஓவியக்காட்சியில் இடம்பெற்ற பார்வதிசிலை பற்றியும் டெயிலி நியூஸ் பத்திரிகையில் பாராட்டுக் குறிப்புரைகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 33-34