ஆளுமை:பாலமனோகரன், அண்ணாமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலமனோகரன்
தந்தை அண்ணாமலை
பிறப்பு 1942.07.07
ஊர் முல்லைத்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாலமனோகரன், அண்ணாமலை (1942.07.07 -) முல்லைத்தீவு, தண்ணீரூற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அண்ணாமலை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று 1962 இல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். இவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 196 7இல் மூதூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஏற்றதுடன் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

இவரது முதலாவது சிறுகதையான "மலர்கள் நடப்பதில்லை" சிந்தாமணி பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' 1973 இல் வீரகேசரியில் வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் மித்திரன் பத்திரிகையில் வெளியானது. இவர் இளவழகன் என்ற புனைபெயரில் எழுதினார்.

இவர் நிலக்கிளி, கனவுகள் கலைந்த போது, வட்டம்பூ, குமாரபுரம், தாய்வழித் தாகம், நந்தாவதி முதலான நாவல்களையும் தீபதோரணங்கள் என்னும் சிறுகதைத் தொகுதியையும் நாவல் மரம் என்னும் டேனிஷ் மொழியில் அமைந்த சிறுகதைத்தொகுதியையும் டேனிஷ்-தமிழ் அகராதியையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 93 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 36-39

வெளி இணைப்புக்கள்