ஆளுமை:பாரூக், சய்யத் முகமத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாரூக்
தந்தை சய்யத் முகமத்
தாய் -
பிறப்பு 1940.01.01
இறப்பு 2019.05.06
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாரூக், சய்யத் முகமத் (1940.01.01-2019.05.06) மலையகம் மாத்தளையில் பிறந்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். இவரது தந்தை சய்யத் முகமத். இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்துள்ளார்.

இவரது ஆக்கங்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், பைஸ் அகமத் பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும், பாலத்தீனக் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்துள்ளார். காற்றின் மௌனம், ஷரந்தீபிலிருந்து மஹ்மூத் ஸலி அல் பரூதி, Genesis ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். 2016 ஆம் ஆண்டு கொடகே வாழ்நாள் விருதினையும் இவர் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்