ஆளுமை:பாமா ராஜகோபால், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜகோபால்
தந்தை குமாரசாமி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜகோபால், குமாரசாமி யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை குமாரசாமி. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று, இளம்பராயத்தில் விவேகி என்ற மாதச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஈழநாடு, தினகரன் முதலான பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் பாமா ராஜகோபால் என்ற புனைபெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவர் ஈழநாடு வார மலரில் தொடராக எழுதிவந்த "வல்வைக் கப்பல் அமெரிக்கப் பயணம்" என்னும் தொடரை நூலாக்கி வெளியிட்டுள்ளார். இவற்றுடன் மக்கள் பிரதமர் ஸ்ரீமா, ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66-67
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 376-377