ஆளுமை:பரராஜசிங்கம், எஸ். கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரராஜசிங்கம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், கட்டுவன்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராஜசிங்கம் எஸ். கே. யாழ்ப்பாணம், கட்டுவனைச் சேர்ந்த மெல்லிசைப் பாடகர், வானொலிக்கலைஞன். இவர் இளமையில் இசையில் தேர்ச்சி பெற்றிருந்தார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர், ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக இருந்த போது, 1961 இல் இலங்கை வானொலியில் இணைந்து கொண்டார்.

இலங்கை வானொலி வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்துத் திரை தந்த இசை, ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். வானொலிப் பிரதிகள் தொடர்பாக "இதய ரஞ்சனி" என்ற நூலை என். சண்முகலிங்கனுடன் இணைந்து எழுதியுள்ளார். இவரது மெல்லிசைப்பாடல்களை கே. எஸ். பாலசந்திரன் பதிவு செய்து 1994 ஆம் ஆண்டு "ஒலி ஓவியம்" என்னும் ஒலி நாடாவாக வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 82-85