ஆளுமை:பரமேஸ்வரி, வீரசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரி
தந்தை வீரசிங்கம்
தாய் இரத்தினம்
பிறப்பு 1933.06.15
ஊர் தும்பளை
வகை அரசியல்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வீரசிங்கம் ஆனந்தசங்கரி 1933.06.15 பருத்தித்துறை தும்பளையில் பிறந்தார். அச்சுவேலி அமெரிக்க மிஷன் கிறிஸ்தவக் கல்லூரியிலும், பருத்தித்துறை சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் கற்றார். யா/புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும், கொழும்பு மருதானை சாகிரா கல்லூரியிலும் கற்றார். சட்டத்தரணியாகவும், ஆசிரியராகவும் இருந்தார்.1955 ஆம் ஆண்டில் இடதுசாரி இலங்கை சமசமாஜக்கட்சியில் சேர்ந்து கொண்டார். 1965 ஆம் ஆண்டில் கரைச்சி கிராம சபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1966 ஆம் ஆண்டு அகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இணைந்து 1968 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி நகரசபையின் முதல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1970 ஆம் ஆண்டு முதல்முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும், அதன் தலைவராகவும் இருக்கின்றார். கிளிநொச்சி மாவட்டத்தின் பல அபிவிருத்திகளுக்கும் மூலகர்த்தாவாக விளங்கினார். இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் சமரசம், அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் விருது வழங்கப்பட்டது.