ஆளுமை:பரமேஸ்வரன், நவரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரன்
தந்தை நவரத்தினம்
பிறப்பு 1956.01.31
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரன், நவரத்தினம் (1956.01.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நவரத்தினம். இவர் எஸ். வடிவேலு, ஏ. எஸ். ராமநாதன் ஆகியோரிடம் பண்ணிசை, கதாப்பிரசங்கம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்று 1972 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவருடைய பணி 1973 ஆம் ஆண்டு கே. கே. எஸ். ஆனந்தன் எழுதிய புத்தி வந்தது என்னும் சமூக நாடகத்தில் ஆரம்பித்து இளந்தொண்டர் சபையின் இசை நாடகம் வரை தொடர்ந்து காணப்பட்டது. இவரது நாடகத் தயாரிப்புக்கள் இந்து கலாச்சார அமைச்சு, யாழ்ப்பாண மாவட்டக் கலை கலாச்சாரப் பேரவை, தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 193